
இரத்தப் புதையல் Ratha Pudhaiyal — Blood Treasure
கிரீன்லாந்தின் உறைபனிக்கு அடியில் ஒரு சத்தமில்லாத யுத்தம்
இந்த நூலை வாங்க
₹300ஒவ்வொரு இணைப்பும் அந்தக் கடையின் தளத்தைத் திறக்கும். விலை, இருப்பு, அனுப்புதல் அனைத்தும் விற்பனையாளர் பொறுப்பு.
- பதிப்பகம்
- தி ரைட் பப்ளிஷிங்
- மொழி
- தமிழ்
- வடிவம்
- அச்சுப் பிரதி
- ISBN
- 978-81-963049-0-0
முன்னோட்டம்
YouTube-இல் பாருங்கள் ↗கிரீன்லாந்து. இரவு நேரம். அந்தப் பனிப் பிரதேசத்தின் இருட்டில், ‘நூக்’ நகரம் மட்டும் ஒரு மெல்லிய மின்மினிப் பூச்சியைப் போல மின்னித் தொலைத்தது.
கதைச் சுருக்கம்
கிரீன்லாந்தின் ஒரு குளிர்கால நள்ளிரவு. யார் கண்ணிலும் படாமல் ஒரு சீ-பிளேன் கடலில் இறங்குகிறது. அதிலிருந்து இறங்கியவன் நூக் நகருக்குள் சரியாக 42 நிமிடங்கள் இருக்கிறான். திரும்பும்போது அவன் கையில் ஒரு சிம் கார்டு. அதற்குள் ஒரே ஒரு சிவப்புப் புள்ளி: ஆர்க்டிக் வட்டத்துக்கு மேலே, மனித நடமாட்டமே இல்லாத பனிப்பாலைவனத்தில் புதைந்திருக்கும் ஒரு புதையல்.
அது தங்கம் அல்ல. எதிர்கால தொழில்நுட்பத்தை ஆளப்போகும் ‘ரேர் எர்த்’ கனிமங்கள். அந்தச் சரக்கு யாருக்கும் தெரியாமல் கள்ளச்சந்தையில் ஏலத்துக்கு வருகிறது என்ற சேதி கசிந்ததும், உலகின் நிழல் சாம்ராஜ்யங்கள் விழித்துக்கொள்கின்றன.
இந்தோ-ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவர் பிரதம் ‘டைகர்’ வாக், தன் மிக விசுவாசமான தளபதியான ‘பிளட் ப்ரீஸ்ட்’ ருதிர் ரித்விஜைக் களமிறக்குகிறார். கலபிரியாவின் டி லூகா குடும்பத்தில், கேம்பிரிட்ஜில் படித்து ஆறு மொழிகள் பேசும் பேரழகி வலேரியா டி லூகா, தான் சாம்ராஜ்யத்தின் வாரிசு என்பதை நிரூபிக்கக் காத்திருக்கிறாள். ஈக்வடாரில், சாமியாரைப் போல அமைதியான இளம் தலைவன் ஜெய்ம் பிளாங்கோ, சிதைந்த தன் படையை மீண்டும் கட்டியெழுப்பத் துடிக்கிறான்.
லண்டன் கிளப்களில் தொடங்கி, டுப்ரோவ்னிக் சந்திப்புகள் வழியே, உறைந்த பனிப்பாலைவனம் வரை நீளும் சதி வலை. மூளைக்கும் மூர்க்கத்துக்கும் இடையிலான இந்த ஆட்டத்தில், பனி உடையும்போது ரத்தம் கொட்டும்.
கதை பயணிக்கும் இடங்கள்
கிரீன்லாந்துமக்காச்ச்கலாகலபிரியாரோம்கிட்டோலண்டன்டுப்ரோவ்னிக்
வாசகர் விமர்சனங்கள்
வாசகர்கள் சொல்வது
“Greed, power plays, and zero margin for error. … Solid, fast-paced, and hard to put down midway.”
4 · YouTube · Instagram
வீடியோ விமர்சனங்கள்
YouTube, Instagram-இல் வாசகர்கள் பகிர்ந்த விமர்சனங்கள்.
Instagram ரீல்கள்
இன்ஸ்டாகிராமின் காட்சியை ஏற்றும்; அது தன் குக்கீகளை அமைக்கும்.
கதாபாத்திரங்கள்
ருதிர் ரித்விஜ்
‘பிளட் ப்ரீஸ்ட்’. புதுக்கோட்டையின் தெருக்களிலிருந்து டைகரால் மீட்கப்பட்டு, இந்தோ-ரஷ்யக் கூட்டமைப்பின் மிக அஞ்சப்படும் தளபதியாக உயர்ந்தவன்.
பிரதம் ‘டைகர்’ வாக்
இந்தியாவின் நிழல் உலகத் தாதா. பேனாவையும் கத்தியையும் வைத்து ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டியவர்.
லாவ்ரெண்டி ப்ரோசோரோவ்
கிழக்கு ரஷ்யாவின் ‘டான்’. டைகரின் இன்னொரு நம்பிக்கைக்குரிய தளபதி.
வலேரியா டி லூகா
மெடிட்டரேனியன் சிண்டிகேட்டின் வாரிசு. முப்பது வயது கூட ஆகாதவள்; கண்ணைக்கூட இமைக்காதவள்.
மாக்சிமோ டி லூகா
85 வயது ‘டான் ஆஃப் டான்ஸ்’. ரோமானிய வரலாற்றின் காதலர்; பழைய ரத்தத்தின் நினைவு.
ஜெய்ம் பிளாங்கோ
பசிபிக் ஆபரேஷனின் இளம் தலைவன். அமைதியானவன்; அதனாலேயே ஆபத்தானவன்.
வாசகர் கருத்துகள்
ஆசிரியரின் ஒப்புதல் பெற்ற கருத்துகள் மட்டும் இங்கே வெளியாகும்.
/ 5
இன்னும் கருத்துகள் இல்லை. முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள்.