
ஏது ஐடென்டிட்டி Aethu Identity
முடிவெடுக்கும் முன்பே உடல் செயல்பட்டால், அது யாருடைய அடையாளம்?
இந்த நூலை வாங்க
₹400ஒவ்வொரு இணைப்பும் அந்தக் கடையின் தளத்தைத் திறக்கும். விலை, இருப்பு, அனுப்புதல் அனைத்தும் விற்பனையாளர் பொறுப்பு.
- பதிப்பகம்
- டிகே பப்ளிஷர்ஸ்
- மொழி
- தமிழ்
- வடிவம்
- அச்சுப் பிரதி · 362 பக்கங்கள்
- ISBN
- 978-81-995779-2-3
முன்னோட்டம்
YouTube-இல் பாருங்கள் ↗தமிழ்ச்செல்வனுக்கு ஆறு மணி நேரத் தூக்கம் என்பது ஒரு லக்சுரி.
கதைச் சுருக்கம்
பெங்களூருவின் ‘நியூராடெக்’ ஆராய்ச்சிக் கோட்டை. உள்ளே நுழைந்தால் வெளியே வர வேண்டிய அவசியமே இருக்கக்கூடாது என்பதுதான் அதன் பாலிசி. ஒரு நள்ளிரவில், ‘ஜெல்லிஃபிஷ்’ என்ற ரகசியத் திட்டத்தின் ஆதாரங்களுடன் ஒரு டேட்டா அனலிஸ்ட் தப்பிக்க முயல்கிறார். அவர் வெகுதூரம் போகவில்லை.
சென்னையில், தமிழ்ச்செல்வன் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவன். ஆனால் எந்த ஆய்வகமும் வேலை தராததால், பதினோரு மணி நேரம் ஆட்டோ ஓட்டுகிறான். ஒரு காலை, அவசரத்தில் அவன் ஆட்டோவில் ஏறிய ஒரு பயணி, அவன் வாழ்க்கையின் திசையையே மாற்றுகிறார்.
பிறகு ஒரு விபத்து. நீண்ட அறுவை சிகிச்சை. மீண்டு எழும் தமிழ்ச்செல்வன் இனி பழைய ஆள் அல்ல. காயங்கள் அசாதாரண வேகத்தில் ஆறுகின்றன. அவன் முடிவெடுக்கும் முன்பே அவன் உடல் செயல்படுகிறது. ஊர் அவனைக் கதாநாயகனாகக் கொண்டாடுகிறது; ஆனால் யாரோ அவனைப் பின்தொடர்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவுக்கான போட்டியில் இந்தியாவின் ஜாம்பவான்கள் மோதிக்கொள்ளும் உலகில், சென்னையிலிருந்து பெங்களூரு வரை நீளும் இந்த டெக்னோ-த்ரில்லர் ஒரு கேள்வியை எழுப்புகிறது: மனிதனை மனிதனாக்குவது எது?
கதை பயணிக்கும் இடங்கள்
சென்னைபெங்களூரு
கதாபாத்திரங்கள்
தமிழ்ச்செல்வன்
32 வயது பயோமெடிக்கல் இன்ஜினியர்; சென்னை ஆட்டோ ஓட்டுநர். அமைதியானவன், கூர்மையாகக் கவனிப்பவன்.
டாக்டர் அனந்த தேவதாஸ்
வோர்டெக்ஸ் சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் ஆய்வுத் தலைவர்.
விக்ரம் ராவ்
நியூராடெக்கின் இந்தியப் பிரிவு சி.இ.ஓ. எப்போதும் ஒரு ‘டெக்னோக்ராட் மன்னன்’.
டாக்டர் பிரியா மேத்தா
சினாப்ஸ் டைனமிக்ஸின் இந்தியப் பிரிவு சி.இ.ஓ. விக்ரம் ராவின் பரம வைரி.
வாசகர் கருத்துகள்
ஆசிரியரின் ஒப்புதல் பெற்ற கருத்துகள் மட்டும் இங்கே வெளியாகும்.
/ 5
இன்னும் கருத்துகள் இல்லை. முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள்.